கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹூபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கணிசமாக் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஹூபெ மாகாணத்தில் உள்ள 11 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், வூஹான் நகரில் 14 பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமலே வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், வூஹான் நகரில் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 337- ஆக அதிகரித்துள்ளது. இதே போன்று, ஜிலின் மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த மாகாணங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. ஜிலின் மாகாணத்தில் 2 பேருக்கும்,ஷாங்காய் மாகாணத்தில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இதுவரை சீனாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 82,954 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பினால் 82 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்கள். அந்த நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா பாதிப்பை உறுதி செய்வது கடுமையான சவாலாக இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.
எந்த அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா தொற்று இருக்கும் நபர்களால், பிற நபர்களுக்கு தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் சீனா கவலையில் உள்ளது. மேலும், சீனாவில் உள்நாட்டு விமானங்களின் சேவை தொடங்கி உள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததில், 60% விமான சேவைகள் மீண்டுமே இயங்க தொடங்கியுள்ளது. பள்ளிகளும் செயல்பட தொடங்கியுள்ளது.