மத்திய வங்க கடலின் தென் பகுதியில் ஆம்பன் புயல் உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் 170 – 180 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் வங்கதேசத்தின் ஹாதியா தீவுக்கும் இடையே மே 20ம் தேதி இரவு இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில் பருவநிலை மாற்றம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று மாலை 4 மணிக்கு உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.