Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் சிறப்பு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக வெளியான அறிவிப்பிற்கு மனவுவந்து பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்.

இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். மேலும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளுக்கு கிடைக்காது. இதனால் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு மானியம் அளிக்கும் முடிவை தமிழக அரசிடமே விட வேண்டும். மாநில அரசு கூடுதல் கடன் பெற விதிக்கப்பட்ட நிபந்தைகள் தேவையற்றது என்பதால் அதனையும் ரத்து செய்ய என வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களின் நெருக்கடியான சூழைலை புரிந்து திருத்தங்கள் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |