Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதுவும் பெண் குழந்தை….! ”4 நாளான சிசு கொலை” மதுரையில் கொடூரம் …!!

பிறந்து 4 நாட்கள் ஆன பெண் சிசு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த தவமணி சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை இருந்த நிலையில் நான்காவதாக கடந்த 10ம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பெண் குழந்தை பிறந்து நான்காவது நாளில் உடல் நலக்குறைவால் இறந்ததாக, அந்த சிசுவை அவர்கள் வீட்டின் அருகே இருக்கக்கூடிய முட்புதரில் புதைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த நிலையில் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை தெரிவித்து நிலையில் காவல்துறையின் பரிந்துரையின் பேரில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஒரு மருத்துவ குழு அந்த சிசு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பெண் சிசுவுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த சிசுவின் தந்தை தவமணி மற்றும் பாட்டி பாண்டியம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் 3 பேர் கொலை, கூட்டுச் சதி செய்தல் உள்ளிட்ட 3 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |