மாநிலங்களின் கடன் பெறும் வரம்பு 3%-இல் இருந்து 5%-ஆக உயர்த்த முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
- தற்போது 3% ஆக உள்ள மாநிலங்கள் கடன் வாங்கும் வரம்பை 5% ஆக தளர்த்தி உத்தரவு
- மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு கூடுதலாக 4.28 லட்சம் கோடி நிதி கிடைக்கும்.
- 2020-21 ஆம் நிதியாண்டில் மாநிலங்கள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை உலக நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். அதாவது மாநிலங்கள் தம் ஜிடிபி மதிப்பில் 5% வரை கடன் வாங்க அனுமதி.
- கடன் வரம்பை மாநிலங்கள் பயன்படுத்தவில்லை. மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 86 சதவீத வரம்புகளை மாநில அரசுகள் பயன்படுத்தாமல் உள்ளது.
- கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மாநில அரசின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளது. வருவாய் பற்றாக்குறை மானியத்தை குறித்த காலத்தில் மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது
- வருவாய் பற்றாக்குறை நிதியாக மாநில அரசுகளுக்கு 12,390 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
- திட்டங்களை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் உதவி வழங்கப்படும்,
- மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு உயர்த்தப்படுவதன் மூலமாக ரூ.4.28 லட்சம் கோடி கூடுதலான மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.