Categories
கல்வி மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? – சர்வதேச நிபுணர்கள் சொல்வது என்ன ?

பள்ளி திறந்தாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் வேண்டாமா என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்திருக்கின்றது.

இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். குழந்தைகளை கொரோனா தாக்கும் எனினும், பெரியவர்களுக்கு ஏற்படும் அளவிற்கு சேதம், குழந்தைகளுக்கு ஏற்படுவது இல்லை. அது மட்டுமல்ல சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு விடும்போதும், அங்கிருந்து அழைத்துச் செல்லும் போதும், பள்ளியில் உள்ள பெற்றோர்கள் நுழையக்கூடாது.

பள்ளிக் கூடத்துக்கு உள்ளே எங்காவது கையெழுத்திடும் போது ஒரு பேனாவை பயன்படுத்த கூடாது. ஏன் என்றால் யாருக்கு கொரோனா வைரஸ் இருக்கோ, அவர்கள் எதை தொடுகிறார்களோ, அதை மற்றவர்களும் தொட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்ற காரணமாக தான் தனித்தனி பேனாவை பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆசிரியர்களும், குழந்தைகளும் கை கழுவிய பிறகே பள்ளிக்குள் நுழைய வேண்டும்.

கிருமிநாசினி வைத்து கைகழுவ பள்ளியின் வெளியே  வசதிகள் செய்து தரவேண்டும். பள்ளிக்குள் தனிநபர் இடைவெளியான 6 அடி அவசியம் பின்பற்ற வேண்டும். ஏசி பயன்படுத்த கூடாது, பள்ளிக்கூடம் அறைகள் காற்றோட்டமாக இருக்கவேண்டும். வெளியிலிருந்து காற்று உள்ளே வீச வேண்டும், உள்ளிருக்கும் காற்று வெளியே செல்ல வேண்டும். ஏன் அப்படி என்றால் ?

காற்றோட்டமாக இருக்கும் இடத்தை காட்டிலும் ஏசி அறையில் தான் கொரோனா அதிகமாக உயிர்வாழும் என்று நிபுணர்கள் சொன்ன காரணத்தால் பள்ளிக்கூடத்தில் தயவுசெய்து ஒரு சில இடங்களில் AC இருந்தாலும் அதை பயன்படுத்த வேண்டாம். தமிழக அரசு நிறைய சுற்றறிக்கை கொடுத்துள்ளதில் பெரும்பாலும் கடைகளில் ஏசியை பயன்படுத்தாதீங்க என்று சொல்லியுள்ளார்கள்.

கிருமி நாசினி கொண்டு பள்ளிக்குள் அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருக்கிறதா ? என தினம்தோறும் உற்று நோக்க வேண்டும். பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் ஒரு மருத்துவருடன் எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும். பாடசாலையில் நாற்காலிகள் குறைவாக இருப்பது அவசியம். ஒரே இடத்தில் குழந்தைகள் கூட்டம் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிகள் தாங்கள் எடுத்திருக்கும் தற்காப்பு நடவடிக்கைகளை பெற்றோருக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளை விட நேரில் சென்று பாடம் கற்பது குழந்தைகளுக்கு சிறந்தது என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். நேரில் சென்று பாடம் எடுத்தால் பழக்க வழக்கங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு நேரில் சென்றால் தான் தெரிய வரும். சக மாணவர்களுடன் எப்படி பழகுவது ? ஆசிரியர்களோடு எப்படி  பழகுவது ?கண்பார்வை எப்படி இருக்க வேண்டும் ? பார்வையின் மூலம் மற்றவர்களை எப்படி புரிந்துகொள்வது ?

இந்த மாதிரி நிறைய திறமைகள்  குழந்தைகளுக்கு வளரும் என்றால் அது ஆன்லைனில், இன்டர்நெட்டில் வளராது.  நேரில் சென்றால் தான் குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொள்ள மிகவும் பெரிதாக உதவும் என்று சர்வதேச நிபுணர்கள் சொல்கிறார்கள். ஸ்கூலுக்கு போகலாம் ஆனால் மேலே கூறிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பள்ளிக்கூடங்கள் செய்திருக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சர்வதேச நிபுணர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |