வங்கக்கடலில் ‘உம்பன் புயல்” உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து தற்போது புயலாக மாறி இருக்கிறது. இதற்க்கு ”உம்பன்” என பெயர் இடப்பட்டுள்ளது. இந்த பெயர் தாய்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அதற்குப் பிறகு வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புயலை இரண்டு வகையாக கணித்தனர். இது ஆந்திரா கடற்கரை அருகே வங்க தேசம் கிட்ட போய் கரையை கடக்கலாம் என்று சொல்லப்பட்டது. ஒரு வேலை இப்படி கடந்தால் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருந்தது. மற்றொரு வகையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை நோக்கி நகர்ந்து வங்கதேசத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கு என்று கணிக்கப்பட்டது. அதே போல இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்வதன் காரணமாக வரும் செவ்வாய்க் கிழமையில் இருந்து தமிழகம் முழுவதும் வெப்பநிலை அதிகப்படியாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது தற்போது புயலாக மாறியுள்ளது.