Categories
தேசிய செய்திகள்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு!!

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர், சிறுதொழில் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், கனிமவளத்துறை, விமான பராமரிப்புத்துறை போன்றவற்றில் தனியார் பங்களிப்பு ஊக்கிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளை பயன்படுத்தி தங்களின் திறனை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைகோள் தயாரிப்பு மற்றும் ஏவுதலில் தனியார் துறைக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். எதிர்கால விண்வெளித்திட்டத்தில் தனியார் துறையினர் அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |