கொரோனா சிகிச்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியை பாராட்டிய அமெரிக்கா அதிபர்…
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிறந்த அறிவியலாளர்கள் உள்ளதாகவும் மருத்துவ விஞ்ஞானத்தில் பலதரப்பட்ட காரணிகளுடன் இந்திய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார். கொரோனா சிகிச்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சி பாராட்டுக்குரியது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.