Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

வீட்டுக்கு அருகே 10ம் வகுப்பு தேர்வு மையம்…! கல்வித்துறையின் அதிரடி முடிவு …!!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பகுதியிலே தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வு ஜூன் 1ல் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வியாக முன்வைக்கப் பட்டது என்னவென்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பார்கள் ? அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு வெளியே விடுவதற்கு அனுமதி வழங்கப்படாதே ? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்காக கட்டுப்படுத்த பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு மையங்களை அமைக்கலாமா ? என்ற ஒரு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வகுத்து வருகிறது.

கட்டுப்படுத்த பகுதியாக இருந்தால் அதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? என்பது குறித்த விவரத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து, அதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு அந்தப் பகுதிக்கு அருகிலேயே ஒரு சிறப்பு தேர்வு மையத்தை அமைக்கலாம் என்ற ஒரு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வகுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் தெரிவித்ததாக தெரிகின்றது.

Categories

Tech |