Categories
செங்கல்பட்டு தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 55 பேருக்கும், தென்காசியில் 8 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வெளிமாநிலம் மற்றும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என 55 பேருக்கு ஒரே நாளில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதில் 68 பேர் குணமடைந்திருந்த நிலையில் 377 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

மேலும் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் 55 பேருக்கு உறுதியானதால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது. அதில், பலர் கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் அடங்குவர். அதேபோல தென்காசி மாவட்டத்திலும் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 8 பேரும் மும்பையில் இருந்து தென்காசி திரும்பியவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் நேற்று வரை 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 34 பேர் குணமடைந்த நிலையில் 22 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் தற்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |