பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் குடும்பத்தினரை தீ வைத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தஸ்கா நகரின் முகமது புறா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மே 10 அன்று குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 25 வயதான அலி ஹம்சா அவரது போதை பழக்கங்களை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்களுடன் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் தூங்கும் பொழுது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டதாக காவல்துறையினரிடம் அலி ஹம்சா தெரிவித்துள்ளார். அதோடு தீவிபத்து ஏற்பட்டு மொத்த குடும்பமும் இறந்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கும் தான் முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது தந்தை மற்றும் தாய் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
சகோதரிகள் ஃபவுசியா மற்றும் சோபியா சகோதரர் ஹைதர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஹம்சாவின் சகோதரர் அலி ராசா மற்றும் இளைய சகோதரி ஹர்ரம் ஷெஹ்ஜாதி ஆகியோர் இன்றுவரை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.