Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 80 பேர்: முதல்வர் பினராயி!!

கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு விமானங்கள் மற்றும் ரயில்கள், பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து கேரளாவிற்கு எண்ணற்றோர் வந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்தது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 493 பேர் குணமடைந்த நிலையில், 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 4 ஆக உள்ளது.

Categories

Tech |