Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் : 3ம் கட்ட அறிவிப்பில் விவசாயிகளுக்கான முக்கிய அம்சங்கள் – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டுள்ளார். அதில்,

  • தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை
  • விவசாயிகள் பயன்பெற நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50% மானியம்
  • அதிக வளர்ச்சி உள்ள இடத்தில் இருந்து பற்றாக்குறை இடங்களுக்கு பொருட்களை அனுப்பினால் 50% போக்குவரத்து மானியம் அளிக்கப்படும்.
  • அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தம் கொண்டு வரப்படும், வெங்காயம் பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன.
  • அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தம் கொண்டு வரப்படும்.
  • வெங்காயம் பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன.
  • விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டத்தின் மூலம் ரூ.5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • விவசாய பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த வழிவகை செய்யப்படும்
  • பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.6400 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது.
  • ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.18,700 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
  • பொதுமுடக்க காலத்தில் விவசாயிகளிடமிருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
  • பீமயோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு வரவேண்டிய ரூ.6,400 கோடி நிலுவைத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது
  • ஊரடங்கு காலத்தில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
  • விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
  • காய்கறி போக்குவரத்து வாகன கட்டணத்திற்கு 50% மானியம்
  • ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைபயிரை மையமாக கொண்டு உணவு நிறுவன பூங்காக்கள் அமைக்கப்படும்
  • குறு உணவு உற்பத்தியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |