மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர இருக்கின்றது.
கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு, 2ஆம் ஊரடங்கு, 3ஆம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டும் என பிரதமர் மோடி நேற்று முன்தினம் மக்களிடம் பேசினார். 18ஆம் தேதியில் இருந்து கடைப்பிடிக்கப்பட இருக்கும் 4ஆவது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்றும் பிரதமர் மோடியும் தெரிவித்திருந்தார்.
மதுக்கடை திறப்பு:
இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் இரண்டாவது ஊரடங்கு முடிந்து, மூன்றாவது ஊரடங்கு அமல்படுத்த பட்டதுமே மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு தளர்வுகளை பிறப்பித்தது. அதேபோல மாநில அரசாங்கமும் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்தது இதையடுத்து தமிழகத்திலும்7ம் தேதி மதுக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நிபந்தனை:
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக ஐந்து பேருக்கு மேல் மதுக்கடைகளில் ஒன்றாக கூட கூடாது. சமூக விலகல் முறையாக கடைபிடிக்க வேண்டும். மது வாங்க வருபவருக்கு ஆதார் கார்டு கட்டாயம் . ஒருவருக்கும் 750மில்லி லிட்டர் மது தான் கொடுக்க வேண்டும். ஒருவர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மது கொடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.
மதுக்கடைகள் மூடல்:
அதே போல மதுவிற்பனை ஆன்லைனில் ஊக்குவிக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளோடு மது விற்பனைக்கு அனுமதி அளித்தது. இந்த நிலையில் மதுக்கடைகளில் சமூக விலகல் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று ஆதாரங்களுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு கடைபிடிக்க தவறிவிட்டது என்று கூறி மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே மதுக்கடைகள் திறந்து இருந்த நிலையில் 9ஆம் தேதி மூடப்பட்டன.
மேல்முறையீடு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த வழக்கில் எப்படியாவது வெற்றி பெற்று, மதுக்கடைகளை திறக்க அனுமதி வாங்கி விட வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முக்கிய வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக அரசின் வழக்கறிஞ்சர்கள் தீவிரமாக திட்டமிட்டு வருகின்றார்கள்.
வருவாய் இழப்பு:
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் பல்வேறு விஷயங்களை உள்ளடங்கியுள்ளது. தமிழக அரசு குறிப்பிட்டுள்ள இந்த விஷயங்களை வைத்தே தமிழக அரசின் வாதங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உயர் நீதிமன்ற தீர்ப்பினால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மதுக்கடைகள் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் கூட்டம் அதிகமாக வந்ததாகவும் இரண்டாவது நாளே அந்தக் கூட்டங்களை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் வேண்டாம்:
அதேபோல மதுக்கடைகளை திறப்பது அரசின் கொள்கை. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு நேர் மாறாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று பல்வேறு வாதங்களை தமிழக அரசு முன்வைக்க இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பார்த்துக்கொள்ளும்:
டாஸ்மார்க் கடைகளை திறக்க விட்டு ஒரு கட்டுப்பாடான அளவில் மதுவை விற்பனை செய்ய வைத்து தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்புக்கு உயர்நீதிமன்ற உத்தரவு ஒரு காரணமாக இருந்தால், இந்த வழக்கை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த நீதிமன்ற நிபந்தனைகளையும் தவிடுபொடியாக்கி தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்குடன் மதுக்கடைகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்கக் கூடாது அதை அரசே பார்த்துக் கொள்ளும் என்று தமிழக அரசு உத்தரவு வாங்கவும் தயாராக இருக்கின்றது.