துலாம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகம் மிக்க நாளாக இருக்கும். வாகன யோகமும் நல்ல வருமானம் இருக்கும். உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி ஏற்படும். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு சுகங்கள் ஏற்படும். மன தைரியம் கூடும். எல்லா வகையிலும் உங்களுக்கு நட்பு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம் வேண்டும். அதாவது வயிறு கோளாறு போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். தூக்கம் குறையும். எதிர் பாலினதாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். இன்று நாள் முன்னேற்றமான நாளாகவே இருக்கும். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு, அக்கறையும் இருக்கும்.
கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனம் வேண்டும். புதிதாக கடனை மட்டும் எதிர்பார்க்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.