வயிற்று கொழுப்பை குறைப்பதன் மூலம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்காமல் காத்துக்கொள்ளலாம்…!
கொரோனவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுடைய வயிற்றுக் கொழுப்பால் வென்டிலேட்டர் வரை வந்து விடுகிறார்கள். சிகரெட் பழக்கம்,மது அருந்தும் பழக்கம் இல்லாமல் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வென்டிலேட்டர் எனும் செயற்கை சுவாசத்துடன் மருத்துவமனையில் உள்ளனர். இதற்கு காரணம் அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்பு, உடல்பருமன். இதனால்அவர்கள் இயற்கையாக சுவாசிக்க முடியாமல் செயற்கை சுவாசம் பொருத்தும் நிலைக்கு வந்து விடுகிறார்கள் என்று கூறுகின்றனர்.
கொரோனா மட்டுமல்ல சர்க்கரை வியாதி, பக்கவாதம் என பல வியாதிகளுக்கு காரணமாக பருமனான உடல் உள்ளது. வயிற்றுக் கொழுப்பு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. கொரோனவிற்க்கு இதுவரை மருந்து மற்றும் தடுப்பூசி ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே நமக்கு போர்வாள். அந்த எதிர்ப்பு சக்தியை வயிற்று கொழுப்பின் மூலம் தயவுசெய்து குறைத்துக் கொள்ளாதீர்கள்.
வயிற்றுக் கொழுப்பை வைத்துக்கொண்டு நிலவேம்பு குடிநீர், கசாயம், விட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டாலும் அது ஓட்டையான பானையை நிரப்ப தண்ணீர் அள்ளி ஊற்றுவதற்க்கு சமம். எனவே வயிற்றுக் கொழுப்பை குறைத்துக் கொள்ளுங்கள். வயிற்றி கொழுப்பை குறைதல் அடிக்கடி வரும் ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம். வயிற்று கொழுப்பை குறைக்க கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உடல் கொழுப்பை குறைக்க உலக சுகாதார மையம் வெளியிட்ட பட்டியல். 1 – 5 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 5 – 17 வயது வரையில் உள்ளவர்கள் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 17 வயதிற்கு மேற்பட்டோர் வாரத்திற்கு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே வயிற்று கொழுப்பை குறைத்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்காமல் காத்துக்கொள்ளலாம்.