கொரோனாவுக்கு பின் மருத்துவத் துறையில் என்னென்ன மாற்றங்களை நிகழும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கொரோனா வைரஸ் நோய் நம் வாழ்வியல் முறைகளை நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புரட்டிப் போட்டுள்ளது. பலரது வாழ்வியல் இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில், மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
அது என்னவென்றால், கியூபா உள்ளிட்ட நாடுகள் மருத்துவத்தை இலவசமாக வழங்கியதன் அடிப்படையே அங்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இறப்பு விகிதமும் குறைவாக காணப்படுகிறது. ஆனால் தனியார் மயமாக்கலை ஊக்குவித்து தனியார் மருத்துவமனைகள் பெருகி மருத்துவத்தை வியாபாரமாக்கியதன் நோக்கமே இன்று வல்லரசு நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்தும் கொரோனா வைரசால் அழிந்துவருகின்றன.
இனி வரக்கூடிய காலங்களில் இலசவ மருத்துவ கல்வி மற்றும் மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து அரசு செயல்படுமா என்பதை உற்று நோக்கினால் நூற்றுக்கு முப்பது சதவிகிதம் அரசு அதற்காக நிதி ஒதுக்கும். தனியார் மருத்துவமனைகள் மேலும் மருத்துவ வசதிகளை விரிவாக்க தான் முயற்சிக்கும்.
ஒரு நல்வாய்ப்பாக ஆரம்ப சுகாதார நிலையம் முதற்கொண்டு மாவட்ட மாநகர நகர மருத்துவமனைகள் அனைத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு சுகாதார பொது மருத்துவமனைகள் புதிதாக கட்டப்படும். ஏற்கனவே உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி மேற்கொள்ளப்படும். ஆனால் இதில் தனியார்த்துறை முதலீடு அதிகரித்து மேலும் மருத்துவத்திற்கான வியாபார லாபமும் பெருகும் என்பதே உண்மையான யதார்த்தம்.