போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருத்தணிகாசலத்தை 18ம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பிய புகாரில் தணிகாசலம் கைதானார். மேலும் அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 6 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திருத்தணிகாசலம் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பரப்பினார். இந்த மருந்தை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இவர் தற்போது சித்த மருத்துவத்துறையால் போலியான மருத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக, சென்னை காவல் ஆணையரிடம் சித்த மருத்துவத்துறை புகார் ஒன்றை அளித்திருந்தது. அந்த புகாரில், கொரோனாவுக்கு உலகளவில் காரோணவுக்கு எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சித்த மருத்துவத்துறையும் என்ன மாதிரியான மருந்துகளை கொரோனாவுக்கு உபயோகப்படுத்த முடியும் என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் தணிகாசலம் போலியான வதந்திகளை பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட அவரை காவல்துறை விசாரிக்க உள்ளனர்.