கொரோனா தீவிர பரவல் குறித்து நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த ஐசிஎம்ஆர் முடிவெழுத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை, சென்னை கோவையில் சோதனை நடத்த ICMR திட்டமிட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் 24,000 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 23,401 பேரும், குஜராத்தில் 8,541 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 8,002 பேரும், டெல்லியில் 7,233 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,785 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா? என்பதை ஆராய இந்திய மருத்துவ கவுன்சில் திட்டமிட்டுள்ளது.