Categories
மாநில செய்திகள்

மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ.1000 கோடி வழங்க மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் முதல்வருடன் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முடம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் ஆலோசனையில் மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்குங்கள் என மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் வழங்க கூடுதல் தானியம் வழங்க வேண்டும். நெல் கொள்முதலுக்கான மானியத்தொகை ரூ.1,321 கோடியை முன்கூட்டியே விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் வாங்கிட சிறப்பு நிதியாக உடனடியாக ரூ. 2 ஆயிரம் கோடி தேவை.

நடப்பு நிதியாண்டில் 33% தொகை, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை வழங்க வேண்டும். தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் மின்சார துறையின் சுமையை குறைக்க நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் 50 சதவீதத்தை விடுவிக்க வேண்டும். சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்க ரூ.2500 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |