தமிழக அரசின் நடவடிக்கையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் 14 பண்ணை பசுமை நகரும் காய்கறி கடைகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள்கை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் விலைவாசி உயரவில்லை என்றும், எந்த பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் நியாய விலைக்கடைகள் மூலம் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே குறைந்த விலையில் காய்கறிகள் வாங்க 305 நடமாடும் கடைகள் மூலம் 1,194 இடங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது புதிதாக 392 இடங்கள் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. 22 பண்ணை பசுமை நகரும் காய்கறி கடைகள், 2 நகரும் கடைகள் உள்ளன. காய்கறிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அப்பகுதியில் கூடுதலாக நகரும் காய்கறி கடைகள் விரிவுப்படுத்தப்படும் என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.