இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் மாநிங்களில் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.தமிழக அரசிடம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று ஏற்கனவே பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ அனுப்பி வைக்கக் கூடிய நடவடிக்கைகள் கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் தமிழக முதலவர் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் என்னவென்றால், தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் ஒரு வாரத்தில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவரை அனைவரும் முகாமில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஒப்புதலுடன் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவர். மாநில அரசின் அனுமதியுடன் படிப்படியாக வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்க பட்டு வருகின்றனர்.
தற்போது வரை 9000 தொழிலாளர்கள் அவர்களோட சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீதமிருக்கும் தொழிலாளர்களும் 8 ரயில்கள் மூலமாக நிச்சயமாக விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தமிழக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.