வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், புதுக்கோட்டையில் 5 கட்டுபடுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் 22 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் செயல்படுவதாகவும், அதில் ஒருமைப்படுத்தப்பட்ட மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் அளித்துள்ளார். உலக சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆரின் அறிவுறுத்தலின் பேரின் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 200 புதிய ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ளன.
தமிழகத்தில் புதிதாக 2,570 செவிலியர்கள் 3 நாட்களில் நியமிக்கப்பட்ட உள்ளனர். ஏற்கனவே தேர்வு எழுதி காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களும் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்டுவார்கள் என கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை முறையாக தனிமைப்படுத்தி வருகிறோம். அவர்களுக்கு மருத்துவ கிட் வழங்கப்பட்டு கண்காணிப்புகள் வழங்கப்படுகிறிகு என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.