Categories
கதைகள் பல்சுவை

சேட்டை செய்யும் பிள்ளைகளா நீங்கள் ,அப்ப உங்க அம்மாக்கு உங்களைத்தான் ரொம்ப புடிக்கும் ..

ஒரு தாய் தனது பிள்ளைகள் பற்றியும் அவர்களது பிரிவினால் ஏற்பட்ட வழிகள் குறித்தும்  தனது அனுபவத்தை  கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் ,படித்தவுடன் உங்களை நெகிழவைக்கும் அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு முன் ,

ஒரு தாய் இன்னொரு தாய்க்கு எழுதிய கடிதம். ஒரு காலத்தில் என்னுடைய வீடு சிரிப்புகளாலும்,விவாதங்களாலும்,சண்டைகளாலும், நகைச்சுவைகளாலும், சேட்டைகளாலும் நிரம்பி வழிந்தது. வீடு முழுவதும் பெண்ணும் ,பேப்பரும் நிரம்பிக் கிடக்கும், கட்டில் மேல் கலட்டி போட்ட துணிகள் கிடைக்கும் ,வீட்டை கொஞ்சம் சுத்தமாக வையுங்கள் என்று எப்பொழுதும் நான் கத்திக் கொண்டே இருப்பேன் .

காலையில்எழுந்தவுடன் மூத்த பெண் அம்மா எனது புத்தகத்தை எங்கே ?என கேட்பாள் .இரண்டாவது பையன் அம்மா சாப்பாடு கொண்டு வாங்க என கேட்ப்பான். கடைக்குட்டி ஐயோ !நான் நேற்று வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று அழுக ஆரம்பிப்பான் .எல்லாரும் எதையாவது என்னைக்கேட்டு தொந்தரவு செய்வார்கள். நான் அவங்க கிட்ட அடிக்கடி சொல்லும் வார்த்தை கவனமாக உங்கள் பொருட்களை எடுத்து வையுங்கள், பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் .

சில வருடங்களுக்கு பிறகு,

இன்றைக்கு நான்  என் வீட்டை சுற்றி பார்க்கிறேன் கட்டில் காலியாக உள்ளது .அலமாரியிலும் கொஞ்சம் துணியே உள்ளது. வினோதமான வாசனை வீட்டில் ஏற்படுகிறது .ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு வாசனை .மூச்சை இழுத்து விட்டு என்னுடைய இதயத்திற்குள் இழுத்து வைத்துக் கொள்வேன் .என்னுடைய வெறுமையான மனசு அது கிடைக்காத என்று ஏங்குகிறது . இன்று என்னுடைய வீடு சுத்தமாக உள்ளது. எல்லாம் அது அது இருக்க வேண்டிய இடத்தில் உள்ளது. வீடு அமைதியாக இருக்கிறது .

ஆனால்எனக்கு இந்த அமைதி பிடிக்கவில்லை. உயிரே இல்லாத பாலைவனத்தில் இருக்கிற மாதிரி உள்ளது  .இப்போலாம் என் பிள்ளைகள் எப்பவாது வந்தாள் கொஞ்ச நாட்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் செல்லும்போது என் மனசு தூக்கிக் கொண்டு போகிற மாதிரி உள்ளது. என் கண்கள் கலங்குகிறது !இப்போ வீட்டில் தனியாக இருக்கிறேன் .பூட்டிய கதவை யாரும் திறப்பதில்லை .என் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் வேற ஊரிலும் வீட்டிலும் தங்கிவிட்டார்கள். நான் எவ்வளவுதான் ஆசைப்பட்டாலும் நானும் அவங்களும் அந்தப் பழைய வாழ்க்கை திரும்பி வாழ முடியாது.

உங்கள் பிள்ளைகளை நீங்கள் திட்டி அவர்களை வருத்தப்பட வைக்காதீர்கள். கொஞ்ச நாள்ல அவர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள் .அவர்கள் உங்களை விட்டு செல்லும் போது சந்தோசமான நினைவுகளோடு செல்லனும். ஏன்னா வீட்டை கட்டுகிறதும்  ஒரு பெண்தான். அதை தன் கைகளால் இடித்து போடுவதும் ஒரு பெண்தான்.

Categories

Tech |