இந்தியாவில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 62,000த்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இந்தியாவில் 59,662ஆக இருந்த கொரோனா பாதிப்பு 62, 939ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாத்தித்த 1981 பேர் உயிரிழந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது 2,109ஆக அதிகரித்துள்ளது. அதே போல 17,847 பேராக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,358ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 3,800 பேர் குணமடைந்துள்ள நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளார். அதே போல குஜராத்தில் 7,796, டெல்லியில் 6,542, தமிழகத்தில் 6535, மத்தியப்பிரதேசத்தில் 3,614 பேருக்கு கொரோனா தெலுங்கானா – 1,163, ஆந்திரா – 1,930, கர்நாடகா – 794, கேரளாவில் 505 பேருக்கு கொரோனா உறுதியானது.