மதுவை தடை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று உறுதியாகக் கூற இயலாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பூரண மது விலக்கு என்பது உலகம் முழுவதும் தோல்வியடைந்த ஒன்று, அது சாத்தியம் இல்லை என்று கூறினார். மதுபானங்கள் கெடுதலை உருவாக்கும். இதில் மாற்றுக் கருத்தில்லை. டாஸ்மாக் கடைகளை 45 நாட்களுக்கு பிறகு திறந்ததால் தான், இந்த அளவிற்கு கூட்டம் கூடியது.
இத்தனை நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தான் குற்றம் குறைவாக இருந்ததே தவிர மதுவால் குற்றம் அதிகரித்தது என்று கூற முடியாது. மதுவைத் தடை செய்தால் பல பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று உறுதியாகக் கூற முடியாது, என்று கூறினார் மேலும் டாஸ்மாக்கை மூடிவிட்டால் வேறு விதமான குற்றச்சம்பவங்கள் நடைபெறும். அதாவது கள்ளச்சாரயம் போன்ற குற்ற செயல்கள் அதிகரித்துவிடும்” என்று கூறியுள்ளார்.