தாம் முழு உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக கூறியுள்ளார். அமித்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
எனக்கு எந்த வித உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் ஷாஹித் சித்திகி ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார். அதில் அமித் ஷாவுக்கு எதுவும் சரியாக இல்லை.
மேலும் அவருக்கு உடல்நிலை சம்மந்தமான பிரச்சனை உள்ளது. மேலும் அரசாங்கம் தாமாக முன்வந்து மக்களிடம் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதை நிலையில் இது குறித்து அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ” சமூக ஊடகங்களில் சிலர் எனது உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புகின்றனர்.
உண்மையில், பலர் என் மரணத்திற்கு ஆசைப்படுகிறார்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சராக தனது கடமைகளைச் செய்வதில் மும்முரமாக இருப்பதால் இந்த வதந்திகளுக்கு கவனம் செலுத்தவில்லை என கூறியுள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான பாஜக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளதால் தான் இன்று தெளிவுபடுத்துவதாக அவர் கூறினார்.