தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் டீ கடைகளை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி கிடையாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.
மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும்வரை தொடரும். சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்; நின்றோ, அமர்ந்தோ உட்கொள்ள அனுமதி கிடையாது தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.