தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 சிறுவர்கள், ஒரு சிறுமி உட்பட 14 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குன்றத்தூர், காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் மேலும் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்ட பகுதிகளான பூந்தமல்லி, குன்றத்தூர், சோழவரம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் இன்று ஒரே நாளில் 45 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திருவள்ளூரில் 315 ஆக உயர்ந்துள்ளது. பெரம்பலூரில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 33 பேரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரம்பலூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 106ஆக உயர்ந்துள்ளது.