தமிழகத்தில் இன்று 125 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றைக்கு டாஸ்மாக் விற்பனை கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மண்டல வாரியாக ஒரு சில மாற்றங்கள் இருக்குமே தவிர ஏறக்குறைய 125 கோடி ரூபாய்க்கு இன்று விற்பனை ஜோராக இருந்துள்ளது. நேற்றைய ஒப்பீட்டளவில் பார்த்தோமானால் இன்றைக்கு மது விற்பனை குறைந்து விட்டதாகவே சொல்லப்படுகின்றது.
தமிழகத்தில் வழக்கமான நாட்களில் 80 லிருந்து 90 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என்பது 120 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும். தற்போது இன்றைய விற்பனை நேற்றைய விற்பனையில் குறைந்தாலும் விழாக்கால விற்பனையை விட அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக மது விற்பனை நடைபெறவில்லை, நிறைய பேர் நேற்று அதிக ஆர்வமாக மது வாங்கி குடித்ததால் அதிக விற்பனை என்றும், ஒருத்தருக்கு இவ்வளவுதான் என்று கட்டுப்பாடுகள், நீண்ட நேரம் வெயிலில் நிற்கும் நிலையால் இன்றைய வியாபாரம் குறைந்திருப்பதாகவும் சற்றுமுன் கிடைத்த தகவல் கிடைத்திருக்கிறது.