10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளார்.
மார்ச் 27 இல் இருந்து ஏப்ரல் 13ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நிச்சயமாக தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டே வந்தது. இந்த நிலையில் தான் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்று மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந் நிலையில் ஜூன் மாத இறுதிக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது ட்விட்டர் மூலமாக தெரிவித்திருக்கின்றார். சில நிமிடங்களுக்கு முன்பு தான் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடைபெறும் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/KASengottaiyan/status/1258726239126188033