மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாததால் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிச் சென்றது.
இந்தச் சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதேபோல சரக்கு ரயில் மோதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.