Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாததால் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிச் சென்றது. இந்தச் சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி என்னை வேதனைப்படுத்துகிறது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசினேன். அவர் இந்தத் துயரச் சம்பவம் குறித்துக் கண்காணித்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 5.30 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாததால் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிச் சென்றது. மேலும் ராகுல்காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் சரக்கு ரயிலால் நசுக்கப்பட்டு உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார். தேசத்தை கட்டமைக்கும் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்து அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

Categories

Tech |