துலாம் ராசி அன்பர்களே …! இன்று முக்கியமான செயல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏற்படும். தகுந்த திட்டமிடுதல் வெற்றி பெற புதிய வழிகளை உருவாக்கிக் கொடுக்கும். சக தொழில் வியாபாரம் சார்ந்தவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். செலவுகளுக்கான பண தேவை அதிகரிக்கும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம்.
இன்று புதிதாக திட்டமிடும் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். பெண்கள் இன்று அதிக செலவுகளை செய்து குறைந்த மதிப்புள்ள பொருட்களை வாங்க நேரிடும். கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேற்றுமை வராமலிருக்க மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.
எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.