ரிஷப ராசி அன்பர்களே …! உங்களுடைய செயலில் பரிமாற்றம் உருவாகும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற பணிபுரிவீர்கள். உபரி பண வருமானம் இருக்கும். பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உச்சத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்பட்டு தான் வந்து சேரும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படலாம். கணவர் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறமும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்.