Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை மது அருந்தியதால் மகள் தீக்குளிப்பு – மதுரையில் சோகம் …!!

தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பல கட்டுப்பாடுகளுடன் இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டது.40 நாட்களாக மதுவை கண்ணில் பார்க்காத பலரும் இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து, சமூக விலகலை கடைபிடித்து மதுவை வாங்கிச் சென்றனர்.

இதனால் தற்போது ஒரு துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கட்டட தொழிலாளியான சிவகுமரன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனமுடைந்து போன மகள் அர்ச்சனா தீக்குளித்தார். மகளை காப்பாற்ற சென்ற தாய் பரமேஸ்வரியும் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |