கேரளா மாநிலத்தில் 2 வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், 25 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, 473 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று வரை 30 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 5 கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், 4 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம், 3 பேருக்கு கேரளாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட 3 பேரும் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் இருந்து வயநாடு வந்த லாரி ஓட்டுநர் மூலமாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் இதுவரை 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.