Categories
மாநில செய்திகள்

அரசாணையும் வந்தாச்சு… “இனி கவலை இல்லை”…அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

தமிழக அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மே 31ம் தேதி முதல் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை உத்தரவிட்டார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று வயது வரம்பை உயர்த்தி உத்தரவு வழங்கப்பட்டது. இந்த உத்தரவு அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |