Categories
உலக செய்திகள்

தடுப்பூசி சோதனை வெற்றி…! ”கொரோனாவுக்கு முடிவுரை” பட்டைய கிளப்பிய இஸ்ரேல்…!!

தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாகவும் இந்தியா மற்றும் அமெரிக்கா நிறுவனத்துடன் தயாரிப்பை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது

சீனாவின் தொடங்கி உலகம் முழுவதும் தொற்று அதிக அளவில் பரவி ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி உயிர் பலிகளை எடுத்துள்ளது. இதனால் உலக மக்கள் அனைவரும் கொடுந்தொற்றில் இருந்து எப்பொழுது தீர்வு கிடைக்கும் என்றும் எப்பொழுது தப்புவோம் என்றும் காத்திருக்கின்றனர். ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேறுவதற்கு தடுப்பூசி அத்தியாவசியமாகிறது. கொரோனா தொற்றை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிக்காத வரை தொற்றிலிருந்து இருந்து மீள்வது நடக்காத காரியமாகவே உள்ளது.

இதனால் கொரோனாவுக்கான தடுப்புமருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சீனா அமெரிக்கா விடாமுயற்சியை எடுத்து வருகின்றது. தற்போது இருக்கும் சூழலில் முதலில் மருந்தை கண்டுபிடிக்கும் நாடு உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்பது அனைவர் மனதிலும் இருக்கும் பொதுவான கருத்து. இதனிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் விஞ்ஞானிகள் அதற்கான மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என டிரம்ப் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

தடுப்புமருந்து கண்டறிய 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று கூறிய நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து தயாராகிவிடும் என டிரம்ப் கூறியது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இருந்தும் தொற்றுக்கான தடுப்பு மருந்தை சீனாதான் முதலில் கண்டு பிடிக்கும் எனவும் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்ததாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நப்தாலி பென்னட் பேசுகையில் “பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான ஐ.ஐ.பி.ஆர் உருவாக்கியிருக்கும் மோனோகுளோனல் நியூட்ரலைசிங் ஆன்டிபாடி நோயாளிகளின் உடலுக்குள்  உருவாகும் கொரோனா தொற்றை அளிக்கவல்லது. இந்த முன்னேற்றத்தை கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

அவர்களின் படைப்பாற்றல் இந்த அற்புதமான சாதனையை கொடுத்துள்ளது என கூறினார். மேலும் கண்டறியப்பட்டுள்ள தடுப்பு மருந்து விரைவில் காப்புரிமை பெறும் என இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு நிறுவனங்களுடன் மருந்து உற்பத்தியை தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |