Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

“சித்ரா பவுர்ணமி” யாரை வழிபட வேண்டும்…..?

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை.

அப்படிப்பட்ட பலம் வாய்ந்த நாட்களில் தான் இயற்கையின் ஏராளமான மாற்றங்கள் நடைபெறும். கடல் தண்ணீர் மேல் எழும்பும் அலை அடிக்கும் அந்த நாளில் விரதம் இருந்தால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும். அவ்வாறாக கொண்டாடப்படும் நாட்களில் முதன்மையானது சித்ரா பவுர்ணமி. இந்த ஆண்டில் அதாவது 2020 ஆம் ஆண்டில் ஏழாம் தேதி வியாழன் அன்று பௌர்ணமி வருகின்றது. அன்று சாதாரண பௌர்ணமி நாட்களை விட இந்நாளில் கிரிவலம் வருவது சிறப்பு மிகுந்தது. அன்றைய தினம் மலையை வலம் வந்து முருகனை வழிபட்டால் மகத்தான வாழ்வு மலரும்.

சித்ரா பவுர்ணமியில் அம்பாளை வழிபட்டபின் சித்ரகுப்தரை வழிபட ஆயுள் விருத்தியாகும். ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும். நமது பாவ புண்ணியங்களையும் பதிவு செய்து வைக்கும் சித்ரகுப்தருக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்கு உரியதாக கருதப்படுகின்றது. மேலும் அந்நாளில் நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவும் கடுகு அளவாக செய்த புண்ணியத்தை மலை அளவாக என நாம் வணங்க வேண்டும். நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

சித்ரா பௌர்ணமி அன்று காலை எழுந்து குளித்து முடித்து காலை முதல் பிற்பகல் வரை விரதம் இருந்து மனதுக்குப் பிடித்த தெய்வங்களை நினைத்து வணங்கி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும் அங்கு அங்கன் சிவன் விஷ்ணு முருகன் ஆலயங்களுக்கு செல்ல முடிந்தால் நல்ல பலன் கிடைக்கும். அன்று தானம் செய்வது மிகுந்த நன்மையை பயக்கும்.  சூரிய நமஸ்காரம் செய்ய சூரிய பகவான் அருள் நமக்குக் கிடைக்கும். அன்று தாயை இழந்தவர்கள் திதி அல்லது தர்ப்பணம் மற்றும் அவர்களை பிரார்த்தனை செய்ய அவர்களின் ஆசி கிடைக்கும்.

Categories

Tech |