Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டம் காணும் அரியலூர்….! மொத்தமாக அடிச்சு தூக்கிய கொரோனா …!!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களின் காரணமாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்த நிலையில் இன்றைக்கு மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. 

கோயம்பேடு சந்தை வாயிலாக அரியலூர், விழுப்புரம் கடலூர்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியது.அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த 412பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்து நடைபெற்ற பரிசோதனையில் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Categories

Tech |