மதுபானக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் டாஸ்மாக்கை நிறுவனம் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமாக 216 மதுபான கடைகள் இருக்கிறது. இதில் நகரப் பகுதிகளில் மட்டும் 67 கடைகள் இருக்கின்றது. இந்த 216 கடைகளில் 48 கடைகள் தடை செய்யப்பட்ட பகுதியில் இருப்பதால் அந்த 48 கடைகளைத் தவிர மீதமுள்ள 168 கடைகள் திறப்பு அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. சேலம் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் இருக்கக்கூடிய மதுபானக் கடைகளில் பாதுகாப்பு காரணமாக மதுபான வகைகள் அனைத்தும் குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
நாளை மதுபானக்கடை திறக்க உள்ள நிலையில் மதுபானங்கள் லாரிகள் மூலமாக ஒவ்வொரு கடையிலும் இறக்கும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 மீட்டர் அளவிற்கு தடுப்புகள் அமைத்து அதன் மூலமாக தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு மதுபானங்களை வாங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது மட்டுமல்லாமல் தனிமனித இடைவெளி, முக கவசம் அணியாதவர்களுக்கு மதுபான வகைகள் தரப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு ஒவ்வொருவருக்கும் முக கவசம் மற்றும் கையுறைகள் மற்றும் கிருமி நாசினி கொடுத்து அவர்கள் கடை பணியில் ஈடுபடுவதற்காக நடவடிக்கைகளையும் டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது.