Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க தடை – பிரதமர் ஜெசிந்தா எச்சரிக்கை….!!

நியூசிலாந்து மசூதியில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் காரணமாக  துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமத்தை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. 

நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஏற்கனவே  உள்ள  நியூசிலாந்து சட்டப்படி ஒருநபர்  16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் நியுசிலாந்து பிரதமர்  ஜெசிந்தா  ஆர்டர்ன், ராணுவத்தில் பயன்படுத்தப்படும்  ரகத்தைச் சேர்ந்த செமி ஆட்டோமெடிக் ரக துப்பாக்கிகளுக்கும், தொடர் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கும் தடை விதிப்பதாகக் கூறியுள்ளார்.

Image result for A ban on gunfire in New Zealand

மேலும், துப்பாக்கிகள் சுடும் போது செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் மேகசின்கள்மற்றும் பம்ப் ஸ்டாக் போன்றவகை துப்பாக்கிகளையும்  தடை விதிப்பதாக ஜெசிந்தா  கூறியுள்ளார். துப்பாக்கிகளை  விற்பனை செய்பவர்கள்  மற்றும் ஏற்கெனவே துப்பாக்கி வாங்கி வைத்திருப்பவர்கள் அரசிடம் திரும்ப அளித்தால் சலுகை விலையில் அதனை ஏற்றுக் கொள்வதாக நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பையும்  மீறி எவரேனும் துப்பாக்கியை வைத்திருந்தால்  4,000 நியூசிலாந்து டாலர் அபராதமும் 3 ஆண்டுகள்  சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |