Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்…? ஒரிஜினல் இருக்கும் போது….. போலி போனி ஆகிட கூடாது….. அமைச்சர் விளக்கம்….!!

போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுப்பதற்காகவே டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நிலுவையில் உள்ள சமயத்தில், சில கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தனிக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அந்த வரிசையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் சென்னையயை  தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் சூழ்நிலையில்,

ஆளும் கட்சியின் சார்பிலும் ஏன் கடையை திறக்க இருக்கிறோம், என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், மே 7ம் தேதி முதல் சென்னையை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்ட பகுதிகளிலும் டாஸ்மார்க் கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் மட்டும் திறக்கப்படவில்லை எனில், போலி மதுபாட்டில்கள் தமிழக எல்லைக்குள் உள்ள ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், போலி மது பாட்டில் விற்பனைகளை தவிர்க்கவே டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |