நெப்போலியனின் மூத்தமகன் Muscular Dystrophy நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டம் பெற்று சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளித்துள்ளது
பழைய சினிமாக்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான பாராட்டுக்களை குவித்த நடிகர் நெப்போலியன் தற்போது தனது குழந்தைகளுக்காக அதிலும் மூத்த மகன் தனுஷ்காக தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் மூத்தமகன் தனுஷ் பல்கலைக்கழகத்தின் BA அணிமேஷன் எனும் நான்கு வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவிற்கு சென்று 10 வருடங்களாக தனுஷ் மீது அதிக கவனம் செலுத்தி அவரது உடல் நலத்தையும் மன வலிமையையும் பாதுகாத்ததினால் அமெரிக்காவில் இருக்கும் சன்செட் மிடில் ஸ்கூல், ராவெவூட் ஹை ஸ்கூல் போன்ற பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்து லிப்ஸ்கோம்ப் பல்கலைக்கழகத்தில் 4 வருடம் பட்டப் படிப்பையும் முடித்து கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தினால் காணொளி மூலமாக வீட்டிலிருந்தே தனது பட்டத்தை பெற்றுள்ளார். இதுவே நெப்போலியனை பெரிதும் மகிழ்ச்சி அடைய செய்த தகவல்.
நெப்போலியன் மகன் தன்னிடம் இருக்கும் அனைத்து திறமைகளையும் வெளிக்காட்டி படங்களை விதவிதமாக வரைந்து, மிகவும் கடினமாக உழைத்து Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப் பட்ட பின்பும் போராட்டமான வாழ்க்கையை தாண்டி சாதித்துக் காட்டியுள்ளார். தான் யார் என்பதை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டி வாழ்க்கையை வெற்றி பெற்றுவிட்டார்.
இதுகுறித்து நெப்போலியன் கூறுகையில் “எவ்வளவு வசதி இருந்தாலும் தன்னம்பிக்கை தான் ஆணிவேர். ஏராளமான குழந்தைகள் அதிலும் Muscular Dystrophy போன்ற பிரச்சினைகளை கொண்ட குழந்தைகள் அதிகம் கஷ்டப்பட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் தனுஷ் செய்த சாதனை பெற்றோர்களான எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவரது விடாமுயற்சி நாங்கள் கொடுக்கும் தைரியம் என அனைத்தும் இணைந்து மேலும் மேலும் வெற்றியை பெறுவார்” எனக் கூறியுள்ளார்.