பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு விமானப்படையில் பைலட்டாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் தான் பெரிய மாவட்டம் இதுவே இந்து மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ராம் தேவ் என்பவர் பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினராக விளங்கும் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் பாகிஸ்தான் விமானப்படையின் விமானியாக சேர்வது இதுவே முதல் முறை.
இதுகுறித்து பாகிஸ்தானிய இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவாணி கூறும்பொழுது “ராகுல் தேவ்க்கு விமானியாக பணி நியமனம் வழங்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மருத்துவம், ராணுவம், குடிமைப்பணி என பல முக்கிய துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். பாகிஸ்தான் அரசு இதுபோன்று சிறுபான்மையினரிடம் கவனம் செலுத்தினால் இனிவரும் நாட்களில் ராகுல் தேவ் போன்று பல ராகுல்தேவ்கள் உருவாகி நாட்டிற்காக சேவை செய்யத் தொடங்குவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.