வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிய விரும்பினால் பணி செய்யலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: ” அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். வெளிமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரியலாம். மேலும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
படிப்படியாக ஒரு வாரத்திற்குள் வெளி மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பொதுமக்கள் கைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மக்களுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேபோல ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் யாரும் பட்டினியாக இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் ஆதரவாதோருக்கு உணவு அளிக்கப்படுகிது.