Categories
சென்னை மாநில செய்திகள்

“MAY-10” வரை தொடர் விடுமுறை……. காய்கறி தட்டுபாடு ஏற்படுமா…? குழப்பத்தில் சென்னை மக்கள்…!!

வருகின்ற மே 10ஆம் தேதி வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க உள்ளதால் சென்னையில் காய்கறி தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில், அதிக அளவில் பொது மக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை மாதாவரத்திற்கு மாற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இருப்பினும், அது வியாபாரிகளுக்கு மிகுந்த சிரமமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதால்,

அந்த முடிவினை அப்போதைக்கு அவர்கள் கை விடுத்தனர். இருப்பினும் கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற நிலையில் மட்டும் அதிகாரிகள் தெளிவாக இருந்தனர். இந்நிலையில் வருகின்ற பத்தாம் தேதி வரை கோயம்பேடு மொத்த மற்றும் சில்லரை மார்க்கெட் குழந்தைகள் முழுவதும் முற்றிலுமாக விடுமுறை அளிக்கப் போவதாக காய்கறி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை பயன்படுத்தி வருகின்ற ஏழாம் தேதி முதல் கோயம்பேடு மார்க்கெட் சந்தையை திருமழிசை பகுதிக்கு மாற்ற பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது. ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம் வியாபாரிகளுக்கு சிக்கல் நீடிக்கும் என்பதால் பேச்சுவார்த்தையானது, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகரில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக காய்கறிகளின் விலை உயரக் கூடும் என்ற செய்தியும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |