Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்தவர், அவர்களை கவனிப்பவர் ஜிங்க் மாத்திரைகள் சாப்பிட தமிழக அரசு பரிந்துரை!

கொரோனா பாதிக்கப்பட்டோர், அவரை கவனித்து கொள்பவர் ஜிங்க் மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என தமிழக பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது.

இதனால் கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு முடிவு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு வெளியே ஸ்டிக்கர் ஒட்டி மருத்துவர்கள் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிப்பார்கள் என கூறப்படுவது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg மாத்திரைகளை 10 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |